News March 19, 2025

கழுத்தில் சேலை இறுகி மாணவன் பலி

image

ஆரணியை அடுத்த காமக்கூர் பாளையத்தை சேர்ந்த தாமோதரன் மகன் ஜெயராமன் (13), தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் அவர்களுடைய கோழிப்பண்ணையில் உள்ள மரத்தில் சேலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென சேலை அவரது கழுத்தை இறுக்கியதில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2025

எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன்?

image

▶ஞாயிறு – சிவலோக பதவி கிடைக்கும், நோய்கள் நீங்கும்
▶திங்கள் – பாவ கணக்கு குறைந்து, புண்ணிய கணக்கு மேலோங்கும்
▶செவ்வாய் – கடன் தீரும், தீவினைகள் போகும், வறுமை நீங்கும்
▶புதன் – கலைகளில் நல்ல வளர்ச்சி, மோட்சம் கிடைக்கும்
▶வியாழன் – குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும்
▶வெள்ளி – செல்வ நலன் கிடைக்கும், குழந்தை பேறு கிடைக்கும்
▶சனி – பிறவிப் பிணி போகும். வியாபாரத்தில் உச்ச நிலை ஏற்படும்

News April 19, 2025

திருமணத் தடை நீக்கும் திருவண்ணாமலை சனிபகவான்

image

ஆரணி படவேடு சாலையில் ஏரிக்குப்பத்தில் அமைந்துள்ளது எந்திர சனீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் சனிபகவான் வேறெங்கும் இல்லாதவாறு எந்திர வடிவில் காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் தாயார் சாயா தேவி உடன் இருப்பதால் சாந்த ரூபத்தில் இருக்கிறார். இந்த ஆலயத்தில் வந்து சனி பகவானை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!