News December 6, 2024

கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 50 பேருக்கு பாதிப்பு!

image

பல்லாவரம் பகுதியில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொடர்ந்து, 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை குரோம்பேட்டை கோதண்டம் நகரைச் சேர்ந்த 2 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News November 19, 2025

செங்கல்பட்டு: ரயில் முன் பாய்ந்த அரசு ஊழியர்

image

தாம்பரம் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருபவர் யுவராஜ். இவர் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவச் சான்றிதழ் அனுப்பி மருத்துவ விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு யுவராஜின் மேலதிகாரி, A.E. கோவிந்தராஜ் விடுமுறையை நிராகரித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த யுவராஜ் நேற்று காலை மறைமலை நகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 19, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

செங்கல்பட்டு காவல் துறை எச்சரிக்கை!

image

செங்கல்பட்டு காவல் துறை இன்று (நவம்பர் 18) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத ரசீது லிங்க்களை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு செங்கல்பட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உண்மையான அபராத ரசீது லிங்க்கள் .gov.in முடிவடையும் அரசின் இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!