News June 27, 2024

கள்ளழகர் கோவிலில் இனி நாள் முழுவதும் அன்னதானம்

image

தமிழகத்தில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 11 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நேற்று சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மதுரை மாவட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 6, 2025

மதுரை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா..!

image

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக், கார், லாரி உள்ளிட்ட 72 வாகனங்களில், 48 வாகனங்கள் 22.12.2025 ஆம் தேதி மதுரையில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 9585511010 எண்ணில் அழைக்கவும். கம்மி விலையில் வாகனங்கள் கிடைக்கும். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 6, 2025

மதுரை இளைஞர் ஏடிஎம்மில் நூதன திருட்டு

image

திருப்­புவ­னத்தை சேர்ந்­த­ மஞ்சுளா (53) மாட்டுத்­தா­வணியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்­க சென்­ற போது அவருக்கு உதவி செய்வது போல் வாலிபர் ஒருவர் நடித்துள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்­த­ போது அவரின் செல்­போனில் ரூ 28,500 பணம் எடுத்­த­தாக மெசேஜ் வந்தது. மாட்டுத்­தா­வணி போலீ­சார் சிசிடிவி பதி­வை ஆய்வு செய்­து வில்­லா­பு­ரம் சபரி கிருஷ்­ணனை(33) நேற்று கைது செய்து ரூ.8000த்தை பறிமுதல் செய்­த­னர்.

News December 5, 2025

மதுரை மாநகராட்சி ஊழியர் வலிப்பு ஏற்பட்டு பலி.!

image

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பிளம்பராக இருந்தவர் ராஜா 50. மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் பகுதி கழிவு நீர் கால்வாய் அருகே அவர் நடந்து சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!