News March 23, 2025
கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்

கள்ளசாராய வழக்கில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மூவரிடமும் தனி, தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று(மார்.22) ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி (பொறுப்பு) ரீனா உத்தரவிட்டார்.
Similar News
News March 26, 2025
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 42 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
News March 26, 2025
10வது பாஸ் போதும்; இலவச பயிற்சியுடன் வேலை

தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க
News March 26, 2025
இளம் பெண் விபரீத முடிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அந்தியூரை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பிரேமா, 30. இந்த தம்பதியினருக்கு இடையே, அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த, 24ம் தேதி காலை மீண்டும் ஏற்பட்ட பிரச்னையால், மனமுடைந்த பிரேமா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.