News March 23, 2025

கள்ளக்குறிச்சி: வனக்காப்பாளருக்கு  துப்பாக்கிச் சூடு 

image

கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை அருகே கல்லமேடு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், கிருஷ்ணாபுரம் பிரிவு வனக்காப்பாளரான இவர், நேற்று(மார்.21) முன்தினம் இரவு கீழ்குப்பம் அடுத்த பாக்கம்பாடி ஆட்டுப்பண்ணை காப்புக்காட்டில் ரோந்து சென்றார். அப்போது வன விலங்குகளை வேட்டையாடிய நபர்களை பிடித்த போது வனக்காப்பாளரை துப்பாக்கியால் சுட்டு தப்பிய இருவரில், ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 29, 2025

இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்

image

கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக அன்பழகன் பணிபுரிகிறார். இவர், 6 மற்றும் 8ம் வகுப்பு வரையில், பாடம் நடத்திய போது, வகுப்பறையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து பெற்றோர் அவர் மீது புகார் தெரிவித்தனர். அன்பழகனை, சி.இ.ஓ., கார்த்திகா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

News March 28, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 28.3.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்

News March 28, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!