News March 24, 2025

கள்ளக்குறிச்சி: ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள தெற்கு காலனியை சேர்ந்த கார்த்திகேயன் என்கிற இளைஞர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மேலும் நேற்று(மார்.24) இரவு சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 2, 2025

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி.<> ஷேர் பண்ணுங்க<<>>

News April 2, 2025

நிம்மதியின்றி தவித்த அரசு அலுவலர் துாக்கிட்டு தற்கொலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தண்டலையைச் சேர்ந்தவர் கதிர்நிறைசெல்வன் (49). தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2 தினங்களாக நிம்மதியில்லாமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா சண்முகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டனர்.

News April 1, 2025

ரிஷிவந்தியத்தில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த பணிகள் தரமற்ற முறையில் செயல்படுவதை திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டிக்கும் விதமாக அதிமுகவினர் வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

error: Content is protected !!