News August 24, 2024
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக.27ல் மக்களுடன் முதல்வர் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக.27ஆம் தேதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் களமருதூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல்லவாடி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கூர் கிராமத்திலும், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ரிஷிவந்தியம் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: சிசிடிவி பழுது.. போலீசார் திணறல்!

உளுந்துார்பேட்டை பகுதியில் போலீசார் அமைத்த சிசிடிவி கேமராக்கள்பராமரிப்பு இன்றி பழுதாகி கிடப்பதால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்லும் முக்கிய பகுதியில், பைக் திருட்டு, வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி மக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு!

திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் வரும் டிசம்பர் 13ம் தேதி தேசிய அளவில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

முதலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா தன்னுடைய இருசக்கர வாகனத்தை நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு மீண்டும் இன்று காலை எழுந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இரு சக்கர வாகனம் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக ஜெயசூர்யா திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்


