News April 28, 2025
கள்ளக்குறிச்சி மாணவர்களுக்கு நற்செய்தி

மாவட்டத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான, தொகுதி திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.பிளஸ் 2 வகுப்பு வரை கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், 15 நாட்கள் கிராமங்களில் தங்கும் ஆர்வம் இருக்க வேண்டும். மாதத்திற்கு ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் 30 சதவீத பயணப்படி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
Similar News
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கள்ளக்குறிச்சி, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: போதை பொருள் விற்பு.. போலீசார் பிடிப்பு!

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அடுத்த அரசராம்பட்டு கிராமத்தில் சப்இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர் மணிமாறன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: தகாத உறவால் 10 லட்சம் நாமம்!

சின்னசேலத்தைச் சேர்ந்த பெண் ஓட்டல் உரிமையாளரிடம் பழகி ரூ.10 லட்சம் வரை பெற்றவர் வெங்கட்மணி (30). அப்பெண் பேசுவதை தவிர்த்ததால் ஆத்திரமடைந்த அவர், தனிமையில் எடுத்த புகைப்படங்களை கணவருக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வெங்கட்மணியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


