News March 19, 2024

கள்ளக்குறிச்சி:  பாதுகாப்பு அறை ஆய்வு

image

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல முன்னேற்பாடாக EVM வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு அதனை வைப்பதற்கு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி கீதா, தனி வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்

Similar News

News December 24, 2025

கள்ளக்குறிச்சியில் 2 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தில் வரும் டிச.29ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி கோட்டத்தில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 250 கால்நடைகள் மற்றும் திருக்கோவிலுார் கோட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 400 கால்நடைகள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 650 கால்நடைகள் உள்ளன என்றும் மாவட்ட நிர்வாகம் தகவல்.

News December 24, 2025

கள்ளக்குறிச்சியில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்!

image

கள்ளக்குறிச்சி: புதுப்பாலப்பட்டு செல்லும் சாலையில் 3 பள்ளிகள் உள்ளன. நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, 1 மாணவி மற்றும் 3 மாணவர்களை அங்கு சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய் விரட்டி விரட்டி கடித்தது. இதில் 4 பேரும் காயமடைந்துள்ளனர். சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் கடந்த 2 நாட்களில் தெரு நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

News December 24, 2025

கள்ளக்குறிச்சி: ஆசையாய் வாங்கியதை பறிகொடுத்த பெண்!

image

மாதவச்சேரியைச் சேர்ந்த கவிதா (38), கள்ளக்குறிச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆசை ஆசையாய், ரூ.20,000-க்கு வெள்ளி கொலுசு வாங்கியுள்ளார். பின்னர் அந்த கொலுசையும், ரூ.5000 பணத்தையும் பர்சில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். திடீரென்று பார்த்தபோது மணிபர்ஸை காணவில்லை. பின்னர், கவிதாவை நோட்டமிட்ட மர்மநபர், அதை திருடியது தெரியவந்தது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!