News March 21, 2024

கள்ளக்குறிச்சி: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

image

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பிச்சமுத்து பச்சையம்மாள் என்பவரது வீடு மின்கசிவினால் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தகவல் அறிந்து இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உடன் இருந்தார்.

Similar News

News July 5, 2025

பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04151-222383) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

News July 5, 2025

மது விற்பனையை தடை செய்த கிராமம்

image

வடக்கனந்தல் அருகே ச.செல்லம்பட்டு கிராமத்தில் மது விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட ஊராட்சி எனவும் பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றச் செயலாகும் என ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பலரும் தற்போது இதை பாராட்டி வருகின்றனர்.

News July 5, 2025

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்

image

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும்.<> இந்த <<>>லிங்க் மூலம் அப்ளை செய்து இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். ஷேர் பண்ணுங்க. <<16950033>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!