News March 21, 2024
கள்ளக்குறிச்சி: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பிச்சமுத்து பச்சையம்மாள் என்பவரது வீடு மின்கசிவினால் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தகவல் அறிந்து இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உடன் இருந்தார்.
Similar News
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: தொடரும் மாடுகளின் உயிரிழப்பு!

மூங்கில்துறைப்பட்டு;பாக்கம் ஏரிப் பகுதியில் மான்களை வேட்டையாட சமூக விரோதிகள் அமைக்கும் சுருக்குக் கம்பிப் பொறிகளில், அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள் சிக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. புதூரைச் சேர்ந்த ஒருவரின் மாடு அண்மையில் பொறியில் சிக்கி மீட்கப்பட்டது. இதை செய்பவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் விலங்கு நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 1, 2025
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில்
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் பணி நடைபெற்றது. (SIR) தொடர்பான கணக்கீட்டுப்
படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (டிச.01) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News December 1, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., தொடர்பான சந்தேகங்களுக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் டிச.11ம் தேதி நிறைவு பெற உள்ளது.. கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி
சட்டசபை தொகுதிகள் உளுந்தூர்பேட்டை – 04149- 222255, ரிஷிவந்தியம் – 04151- 235400, சங்கராபுரம் – 04151- 235329, கள்ளக்குறிச்சி (தனி)-04151-222449 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


