News March 24, 2024
கள்ளக்குறிச்சி: தேர்தல் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு பணி மேற்கொள்ள உள்ள அலுவலர்களுக்கு தேவியாக்குறிச்சி பாரதியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஷ்ரவன் குமார் இன்று ஆய்வு செய்தார்.
Similar News
News April 11, 2025
15 வயது சிறுமி திருமணம்; வாலிபர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி, தோப்பூரைச் சேர்ந்த விஜயகாந்த்,31. இவர் சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்த மோகூர் பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை கடந்தாண்டு திருமணம் செய்தார். இரு வீட்டாரும் இணைந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். தற்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். சின்னசேலம் மகளிர் ஊர் நல அலுவலர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வாலிபர் மற்றும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு.
News April 11, 2025
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News April 10, 2025
கள்ளக்குறிச்சியில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் 138 அங்கன்வாடி பணியாளர்கள், 14 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 133 அங்கன்வாடி உதவியாளர் உள்ளிட்ட 285 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், விண்ணப்பிக்க ஏப்ரல் 23-ஆம் தேதி கடைசி நாள் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த பணிகளுக்கு விண்ணப்பங்களை இந்த லிங்கை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்