News March 29, 2024
கள்ளக்குறிச்சி: தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் இன்று காலை சண்முகா அரங்கில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிகவினரிடம் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் தேமுதிக கூட்டணி கட்சியினர் தன்னை ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
Similar News
News November 6, 2025
கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
கள்ளக்குறிச்சி: வீடு புகுந்து நகைக் கொள்ளை!

பரவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த லலிதா கடந்த 4ஆம் தேதி வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே சென்று இரும்பு பீரோவை உடைத்து, அதில் இருந்த 14,000 ரூபாய் பணம் மற்றும் ஐந்தரை கிராம் தங்க நகை உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
கள்ளக்குறிச்சி: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

1)தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.
2) 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
3)இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க<


