News March 15, 2025
கள்ளக்குறிச்சி: திருமணத் தடை நீக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத்தடை உள்ளவர்கள், இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Similar News
News March 17, 2025
அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். அதிகபட்சம் 12ஆம் வகுப்பும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 25-35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்துகொள்ள <
News March 17, 2025
கள்ளக்குறிச்சி: மரக்கிளை முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜோதி(48). இவர் கடந்த 6ம் தேதி சேலம் செல்ல ஏமப்பேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். சாலையோர புளியமரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 17, 2025
கள்ளக்குறிச்சி: நகை பாலிஷ் காவல்துறையினர் எச்சரிக்கை

சங்கராபுரம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள், கிராமங்களில் தங்க நகையை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாலிஷ் போடும் போது, அசல் நகையை எடுத்துக்கொண்டு, ‘கவரிங்’நகையை கொடுத்து மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.