News August 14, 2024

கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக சக்தி என்பவர் இன்று பொறுப்பேற்று கொண்டார். தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி என்பவருக்கு சக காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News

News November 7, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.6) இரவு முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

காணாமல் போன பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், பகண்டை அருகே உள்ள அவரியூர் கிராமத்தில் மாணவர்களை பார்த்த பொதுமக்கள் பகண்டை கூட்டுச்சாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

News November 6, 2025

திருநங்கைக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் தாட்கோ திட்டத்தின் கீழ் திருநங்கை ஒருவருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவிக்கான ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.6) வழங்கினார். இந்த நிகழ்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநல அலுவலர் தீபிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!