News August 25, 2024
கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகள், குளங்களில் இருந்து மண் எடுப்பதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த தெரிவித்துள்ளார். ஏரி, குளங்களில் இருந்து மண் எடுப்பதை சிலா் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, ஏரிகளில் மண் வெட்டி எடுக்கப்பட்ட அளவு மீறாமல் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள அளவுகளுக்கு மீண்டும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
Similar News
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: பெட்ரோல் பங்க்கில் கைவரிசை.. சிறுவன் கைது!

உளுந்தூர்பேட்டை: மடப்பட்டு தனியார் பெட்ரோல் பங்க்கில் அய்யனார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் கேனில் பெட்ரோல் கேட்டுள்ளனர். அய்யனார் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த போது, அவரிடம் இருந்த கைப்பையை ரூ.2,800 பணத்துடன் பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்த புகாரில் விசாரித்த போலீசார், தோட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: புகாரளித்தவரே குற்றவாளியான சம்பவம்!

உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் லூயிஸ் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். தனது மனைவியின் நகையை வங்கியில் அடகு வைத்து விட்டு வரும்போது, மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்ததாக மனைவியிடம் கூறியுள்ளார். அதையடுத்து போலீசில் புகாரளிக்கப்பட்ட பின்னர், ஜான் நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் வரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


