News June 26, 2024
கள்ளக்குறிச்சி: உயிரிழப்பு 61 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 59 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூன் 26) காலை சேலம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமார் என்பவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏசுதாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 21, 2025
கள்ளக்குறிச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
கள்ளக்குறிச்சி: தீ விபத்தில் வீட்டை பறிகொடுத்த நபர்!

கள்ளக்குறிச்சி: புதுப்பாலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சடையாண்டி மகன் மொட்டையன். இவருக்கு சொந்தமான ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீட்டில் நேற்று மதியம் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி, வீட்டில் இருந்த தானியங்கள், டி.வி., சாமான்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
News December 21, 2025
கள்ளக்குறிச்சி: ‘லிப்ட்’ கேட்ட மூதாட்டியிடம் கைவரிசை!

கள்ளக்குறிச்சி: திருக்கோயிலூரைச் சேர்ந்த தில்லைநாயகி (65), நேற்று பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த காரில் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். அந்த காரை ஓட்டி வந்த மர்ம நபர், வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த 5 பவுன் நகையை அபேஸ் செய்துவிட்டு, தில்லைநாயகியை அங்கேயே இறக்கி விட்டு காரில் தப்பி சென்றார். இது குறித்த புகாரில் அந்நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


