News May 16, 2024
கள்ளக்குறிச்சி: உபகரணங்கள் வழங்கிய அதிகாரி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள, உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் வாரிய களப் பணியாளர்களுக்கு தென்மேற்கு பருவ மழைக்கால முன்னெச்சரிக்கையாக கையுறை, கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை இன்று (மே.16) தமிழ்நாடு மின்வாரிய உளுந்தூர்பேட்டை செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் வழங்கினார்.
Similar News
News October 21, 2025
புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி அமைச்சர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது. கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அக்.21ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News October 21, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக்.21) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News October 21, 2025
மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் வீரவணக்க நாளில் உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் இன்று அக்.21 கருப்பு பட்டை அணிந்து அரசு மரியாதையுடன் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.