News September 15, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மண்டல அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, கடற்கரை கைப்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
எஸ்.ஐ.ஆர். பணியை ஆய்வு செய்த ஆட்சியர் பிரசாந்த்!

(நவ.27) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் எஸ். ஐ.ஆர் பணி மேற்கொண்டு வரும் பகுதியில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்து வருகிறார்.மேலும் பணிகள் குறித்து கேட்டறிந்து விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.இதில் அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு செய்து அறிவுரை வழங்க உத்தரவிட்டார்.
News November 27, 2025
கள்ளக்குறிச்சிஆட்சியருக்கு கோவில் கும்பாபிஷேகம் மரியாதை

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இன்று (நவ.27) மாபெரும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் மாலை மரியாதை அளித்து கோவில் நிர்வாகம் அவரை வரவேற்றனர். மேலும் ரிசிவந்தியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
News November 27, 2025
“TN ALERTS” செயலியை பதிவிறக்கம் செய்ய ஆட்சியர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் “TN ALERTS” செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வானிலை சார்ந்த அறிவிப்புகளை துல்லியமாக வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


