News August 17, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள +2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மாணவர்கள் உலகளாவிய IT நிறுவனத்தில் பணியினை துவங்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 5, 2026
கள்ளக்குறிச்சியில் மின் தடை!

சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் நாளை(ஜன.6) சங்கராபுரம், பாண்டலம், வட சிறுவள்ளூர், வடசெடீயந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜபுரம், பூட்டை, செம்பராம்பட்டு, அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், பொய்யாக்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, கீழப்பட்டு, தும்பை, கூடலூர் பகுதிகளில் காலை 9 – 2 மணி வரை மின் தடை. <
News January 5, 2026
புதுப்பட்டு பகுதிகளில் மின் தடை

புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், ராவுத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 – மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 5, 2026
கள்ளக்குறிச்சி: மனைவி கண்முன்னே கணவர் பலி!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யபாரதி, தனது கணவர் ஆதேஷ் உடன் பைக்கில் விருத்தாச்சலம் செல்வதற்காக ஜி.அரியூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சாலையில் உள்ள எச்சரிக்கை பலகையில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், ஆதேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


