News October 23, 2024
கள்ளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை,36; விவசாயி. பிச்சப்பிள்ளையும், அவரது மனைவி தையல்நாயகியும் நேற்று மாலை நிலத்திற்கு சென்றனர். ஈயனுார் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், வரப்பில் நடந்து சென்ற பிச்சப்பிள்ளை மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: அண்ணன் கூறிய வார்த்தையால் தம்பி விபரீத முடிவு!

கள்ளக்குறிச்சி: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31). இவரது தம்பி சுரேஷ்குமார் (26) தனியார் கேஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சுரேஷ்குமார் கறந்த பாலை எடுத்து செல்லாமல் போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனால் அண்ணன் அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த சுரேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<


