News April 21, 2024
கள்ளக்குறிச்சி: அரசு மரியாதை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த த.பெரியசாமியின் உடல் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி இன்று (21.04.2024) எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள அன்னாரது வீட்டிற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Similar News
News April 19, 2025
ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்

ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது பொன்மகன் சேமிப்புத் திட்டம். இதை குறைந்தபட்சம் ₹100 முதலீட்டில் தபால் நிலையங்களில் தொடங்கலாம். இதில் வருடாந்திர வைப்பு தொகை, குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். தற்போது 9.7% வட்டி வழங்கப்படுகிறது. 15 வருட முதிர்வு காலம் கொண்டது. இதற்கு வருமான வரி சலுகை உண்டு. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 640 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News April 19, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 29 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இன்று வெளியில் வேலைக்கு செல்வோர் மற்றக்காமல் குடை அல்லது ரெயின் கோர்ட் எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க