News April 22, 2025
கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 25ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 30, 2025
அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று (ஏப்.30) கள்ளக்குறிச்சியில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். முடியாதவர்கள் கல் உப்பு வாங்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 29-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் POSH சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளூர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் 0451228800, 9597846790, 8825894085, 9976992480, 997605067, 93616664416 போன்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க