News November 23, 2024

கள்ளக்குறிச்சியில் வாக்காளர் அடையாள அட்டை முகாம் 

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் இன்று மாவட்ட வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்கம் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட தேர்தல் ஆணையர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 18 வயது பூர்த்தி அனைத்து முதல் தலைமுறை வாக்காளர்களும் மற்றும் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படும் வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-26 ஆண்டிற்கான பொதுகணக்கு குழு வரும் நவ.24-ஆம் தேதி, மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சட்டமன்ற பொதுகணக்கு குழுவினரிடம் மக்கள் கோரிக்கை மனுக்களும் அளிக்கலாம். என ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.21) அறிவித்துள்ளார்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: கடனை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல்

image

சவேரியார்பாளையத்தை சேர்ந்த சார்லஸிடம், நந்தன் கடனாக ரூ.3,51,300 வாங்கிவிட்டு அதில் ரூ.1,46,500 மட்டும் திரும்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்ட போது நந்தன் மற்றும் அவரது மனைவி ஜோஸ்பின் மேரி இருவரும் சார்லசை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் நேற்று (நவ.21) வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள் – APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!