News April 4, 2025
கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி பலி

கள்ளக்குறிச்சி, நேற்று காலை திருக்கோவிலுார் அடுத்த மேலத்தாழனூரில் பலத்த மழை பெய்தது. காலை 8:00 மணியளவில் ராதா என்பவரின் வீட்டு தோட்டத்தில் மின்னல் தாக்கியதில்அங்கிருந்த பசுமாடு மற்றும் அதன் கன்று குட்டியும் சுருண்டு விழுந்து இறந்தது. மின்னல் தாக்கி பசு மாடு, கன்று பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (நவ.15) இரவு முதல் (நவ.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 3058 காலியிடங்கள் அறிவிப்பு APPLY NOW!

கள்ளக்குறிச்சி மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் இங்கே <
News November 15, 2025
கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி – ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டுறவு வார விழாவில், தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாட்டு கேடயங்களை வழங்க உள்ளார். இந்த நிகழ்வு நவம்பர் 17-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.15) அறிவித்துள்ளார்.


