News April 3, 2025

கள்ளக்குறிச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, தேவபாண்டலம், சங்கராபுரம், அரும்பாக்கம், தாழனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

Similar News

News December 15, 2025

கள்ளக்குறிச்சி: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த<> லிங்கில்<<>> உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண் அந்த தளத்திலே உள்ளது. ஷேர்!

News December 15, 2025

கள்ளக்குறிச்சி: தகராற்றில் 8 பேர் மீது வழக்கு

image

தியாகதுருகம் அருகே சாத்தப்புத்தூரை சேர்ந்த சகோதரர்களான பரசுராமன் அருள் ஆகியோரிடையே சொத்துத் தகராற்றில் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று, பொதுக் கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதைத் தொடர்ந்து, இருவரும் அளித்த புகார்களின் பேரில், 8பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, பரசுராமன்&அருள் ஆகியோரை கைது செய்தனர்.

News December 15, 2025

கள்ளக்குறிச்சி: டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (டிச.14) இரவு 11 மணியளவில் டேங்கர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!