News August 8, 2024
கள்ளக்குறிச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
Similar News
News November 19, 2025
நடத்துனரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

தியாகதுருகத்தில் தனியார் பேருந்தில் ஏறிய சாந்தி பேருந்தில் தவறி விழுந்த நிலையில் பேருந்து நடத்துனரிடம் ஏறுவதற்குள் பேருந்து எடுத்தது ஏன் என்று தகராறு செய்துள்ளார். தொடர்ந்து அவர் திருநாவலூரில் இறங்கிய நிலையில் பேருந்து கடலூர் சென்று விட்டு திரும்பிய பேருந்தை வழிமறித்து அவரது மகன்கள் சேர்ந்து நடத்துனர் வெங்கடாசலபதியை தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரில் 3 பேர் மீதும் நேற்று (நவ.18) வழக்குபதிந்தனர்.
News November 19, 2025
கள்ளக்குறிச்சி:பெற்ற மகளை சீரழித்த தந்தை கைது!

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டிற்கு திருமலை, என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். (நவ.10) தேதி வழக்கம் போல் வீட்டிற்கு சென்ற திருமலை,சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு சிறுமியின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.இது குறித்து தகவலறிந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குபதிவு செய்தனர்.
News November 19, 2025
கள்ளக்குறிச்சி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <


