News January 24, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (ஜன.24) காலை 10- 1 மணி வரை துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே இவ்வாய்ப்பை வேலை வாய்ப்பற்றோர் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

Similar News

News October 21, 2025

கள்ளக்குறிச்சி: பூச்சி மருந்து குடித்து ஒருவர் தற்கொலை

image

சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் சேர்ந்தவர் ராஜேந்திரன், மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் நேற்று மனைவி இந்திராகாந்தியிடம் குடிப்பதிற்கு பணம் கேட்டார். அதற்கு பணம் தர மறுத்ததால், விரக்கதியில் பூச்சி கொல்லி மருந்தினை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்தார். சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News October 21, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 20.10.25 பரவலாக பல பகுதியில் மழை பெய்தது, அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை வானிலை மையம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்கவும். மேலும் வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். உங்கள் பகுதியில் மழை இருக்கா கமெண்ட் பண்ணுங்க.

News October 21, 2025

கள்ளக்குறிச்சி: மதுபான கடை முன்பு கைகலப்பு

image

சங்கராபுரம் அருகே உள்ள பாலப்பட்டு அரசு மதுபான கடையில் நேற்று பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மோதிக்கொண்டனர். மதுபான கடை அருகே ஒருவருக்கு ஒருவரை சரமாரியாக தாக்கிக் கொண்டதால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன், அவர்களிடம் விசாரணை செய்தனர். பின் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!