News April 12, 2025
கள்ளக்குறிச்சியில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஈரோடு,திருச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர் நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 28, 2025
கள்ளக்குறிச்சி: 100 நாள் வேலை தராத அதிகாரிக்கு அடி உதை!

உலகங்காந்தான் ஊராட்சி செயலாளராக பிரவின் ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று (நவ.27) இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதே பகுதியைச் சார்ந்த மணிகண்டன் என்பவர், தனக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்க முடியாதா என்று கூறி அசிங்கமாக திட்டி அடித்துள்ளார். இது குறித்து மணிகண்டன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 28, 2025
கள்ளக்குறிச்சி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!