News April 12, 2025
கள்ளக்குறிச்சியில் அரசு மானியத்தில் திட்டங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு, 90 சதவீத அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.பயனடைய விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56ஏ, தாட்கோ அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம்- 605 602 என்ற அலுவலகத்தில் நேரிலும், 04146 – 259329 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.
Similar News
News July 11, 2025
கள்ளக்குறிச்சியில் சண்டையை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்!

திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் நேற்று (ஜூலை 10) சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த சண்டையை தடுக்க சென்ற ரமேஷ் என்பவரையும் விஜய் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் விஜய் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News July 11, 2025
கள்ளக்குறிச்சியில் கல்லை டிஜிட்டல் டிரைவ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து புத்தொழில் சூழலியலை வலுப்படுத்தும் நோக்கத்தில், “கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று (ஜூலை 10) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News July 11, 2025
திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் நகராட்சியில் சுமார் 3,413 உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வீடு வீடாக வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் திருக்கோவிலூர் நகராட்சியில் ஜூலை 17 ஆம் தேதியன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.