News April 15, 2025
கள்ளக்காதலியை எரித்து கொன்ற ஆட்டோ ஓட்டுனரும் உயிரிழப்பு

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நுாரிஷாவுக்கும்(42) திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான டில்லிபாபுக்கும்(47) தகாத உறவு இருந்துள்ளது. இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் டில்லிபாபு திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதுடன், நுாரிஷாவையும் கட்டி பிடித்துக் கொண்டார். இதில் கடந்த 11ம் தேதி நுாரிஷா உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று டில்லிபாபுவும் பலியானார்.
Similar News
News November 1, 2025
சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.81 லட்சம் வருவாய்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 73 நாட்களில் பக்தர்களிடமிருந்து ரூ.81,71,715 வருவாய் வசூலாகியுள்ளது. 89 கிலோ தங்கம், 5 கிலோ 903 கிராம் வெள்ளி போன்ற நன்கொடைகளும் கிடைத்துள்ளன. இந்த வருவாய், கோவில் பராமரிப்பு மற்றும் தேவாலய பணிகளுக்காக பயன்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 1, 2025
திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு தடை

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (நவ.2 ந்தேதி), மாலை தொலைத்தொடர்புக்கான LVM3-M5 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. எனவே பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News November 1, 2025
திருவள்ளூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<


