News September 15, 2024
களை எடுக்க ஸ்டாலின் முடிவு?

திமுகவில் குறுநில மன்னர்கள் போல செயல்படும் நிர்வாகிகளை களை எடுக்க CM ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அக்கட்சியின் பவள விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அப்போது, திமுக கட்சி நலனுக்காக சில அதிரடி முடிவுகள், அறிவிப்புகளை அவர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது. அப்போது மூத்த தலைவர்கள் பலரின் சுமையை குறைத்து, இளம் தலைமுறைக்கு பொறுப்புகளை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News November 28, 2025
திருச்சியில் தலைதூக்கிய புதிய மோசடி

திருச்சியை சேர்ந்த கலைவாணி என்கிற பெண்ணின் ஆதார் மற்றும் பான்கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராத தொகையாக ரூ.9 கோடி கட்ட வேண்டும் எனவும், அந்த தொகையை கலைவாணி தான் கட்ட வேண்டுமென, அவர் கணக்கு வைத்துள்ள வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கலைவாணி திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News November 28, 2025
அடுத்த டார்கெட் எஸ்.பி.வேலுமணியா?

2021-ல் எஸ்.பி.வேலுமணிதான் அனைத்து வேலைகளையும் கவனித்துக்கொண்டார். இம்முறையும் அவர் ஆசைப்படியே NDA கூட்டணியில் அதிமுக இணைந்தது. ஆனால் இதையெல்லாம் கவனித்த EPS அபிமானிகள் சிலர், ’வேலுமணியின் கைகள் ஓங்கினால் உங்கள் இருப்புக்கு பிரச்னையாகிவிடும்’ என EPS-யிடம் சொன்னதாக கூறப்படுகிறது. எனவே வேலுமணியை ஓரங்கட்டிவிட்டு, தனது மகன் மிதுன் கைகளில் முக்கிய பொறுப்புகளை அவர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
News November 28, 2025
திரையில் பொன்விழா.. சூப்பர் ஸ்டாருக்கு சிறப்பு கவுரவம்!

வீட்டின் கேட்டை திறந்து சினிமாவில் அறிமுகமான ரஜினி, பாக்ஸ் ஆபீசில் தமிழ் சினிமாவுக்கு பல கேட்களை ஓபன் செய்து வைத்தார். கடந்த 50 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டாராக திகழும் அவரை இந்திய சர்வதேச திரைப்பட விழா(IFFI) இன்று கெளரவிக்கவுள்ளது. அவரை இந்திய சினிமா கெளரவிப்பது அவருக்கு மட்டுமின்றி, தமிழ் திரையுலகிற்கே பெருமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார்!


