News October 31, 2024
களியக்காவிளை தென்காசிக்கு கேரளா அரசு புதிய பஸ் சர்வீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து தென்காசிக்கு கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் இன்று முதல் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. தினசரி காலை 5:30 மணிக்கும் பிற்பகல் 2:40 மணிக்கும் இந்த பஸ் புறப்பட்டு செல்லும். தென்காசியில் இருந்து காலை 10:20 மணிக்கும் இரவு 7:00 மணிக்கும் இந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
குமரி தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் சொந்த வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரத்தில் 288 கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
News November 20, 2024
குமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக நிறுத்தம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று(நவம்பர் 20) கடலில் பயணம் செய்து விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை நின்ற பிறகு படகு சேவை தொடரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
News November 20, 2024
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 6,436 பேர் பயன்!
பெண் சிசுக்கொலையை தடுக்க உருவான “முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு” திட்டத்தில் 2021-22ம் ஆண்டில் 1,948 பேரும், 2022-23ல் 2,242 பேரும், 2023-24ல் 1,771 பேரும், 2024-25.ல் இதுவரை 475 பேர் என மொத்தம் 6,436 பெண் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் வைப்புத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மாவட்ட அதிகாரி விஜய மீனா தெரிவித்துள்ளார்.