News April 25, 2025
கல் சரிந்து விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

விருத்தாசலம் அடுத்த எடையூறை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகள் பவினா (8), இவர் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பவினா நேற்று (ஏப்.24) தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வீடு கட்டுமான பணிக்காக அடுக்கி வைத்திருந்த ஹாலோ பிளாக் கல் சரிந்து பவினாவின் தலையில் விழுந்துள்ளது. இதில் காயமடைந்த சிறுமி பரிதாமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 25, 2025
கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.25) மாலை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மாலை நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
News April 25, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <
News April 25, 2025
கடலூர்: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ <