News March 25, 2025
கல் குவாரியில் மூழ்கிய வாலிபர்; 2வது நாளாக தேடும் பணி

சிவகங்கையை சேர்ந்தவர் பாலமுருகன் (28). இவர் குன்றத்துாரில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பாலமுருகன் தன் நண்பர்களுடன் எருமையூரில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். அப்போது அவர் நீரில் மூழ்கி மாயமானார். சோமங்கலம் போலீசார் மற்றும் படப்பை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. 3வது நாளாக இன்றும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News November 9, 2025
செங்கல்பட்டு: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
செங்கல்பட்டு: திருநங்கையிடம் வழிப்பறி; 3 பேர் கைது

தாம்பரம் கடப்பேரியை சேர்ந்தவர் ஆர்த்தி (24). திருநங்கை. கடை கடையாக சென்று வசுல் செய்து வாழ்ந்து வந்தார். நேற்று கடப்பேரி ஜிஎஸ்டி சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது இவரை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2500/- யை பறித்து சென்றனர். புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் பிரதீப் (24), மதன் (20), தினேஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
News November 9, 2025
செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில்<


