News May 24, 2024
கல்வி பரிசு தொகை வழங்கிய மாவட்ட எஸ்பி

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவலர்களின் பிள்ளைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி பரிசு தொகை காவலர் சேமநல நிதி கணக்கிலிருந்து இன்று வழங்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
Similar News
News April 20, 2025
மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் எண்கள்

கோடைக்காலம் நெருங்கும் நிலையில் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும்.
▶ தீயணைப்பு நிலையம், குத்தாலம் – 04364234101,
▶ தீயணைப்பு நிலையம், மணல்மேடு – 04364254101,
▶தீயணைப்பு நிலையம், சீர்காழி – 04364270101,
▶ தீயணைப்பு நிலையம், மயிலாடுதுறை – 04364222101. ஷேர் பண்ணுங்க.
News April 20, 2025
மயிலாடுதுறையில் பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஎன்எஸ்யுஆர்பி இலவச பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்களது சுய விபரங்களை studycircledeomayil@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
சாலையோரம் காயங்களுடன் தவித்தவரை மீட்ட சமூக ஆர்வலர்

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் நேற்று அடிபட்ட காயங்களுடன் ஒருவர் பல மணி நேரமாக அவதிப்பட்டு வந்தார். விசாரித்ததில் அவர் திருமணஞ்சேரியை சேர்ந்தவர் என தெரியவந்தது. தகவல் அறிந்த சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் மற்றும் சிலர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களது செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.