News May 16, 2024
கல்வி நிறுவனங்கள் வாகனங்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

காரைக்காலில் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் வரும் ஜூன் 1,2 தேதிகளில் போக்குவரத்து துறை வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் அளித்து வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும். இந்த வாகனங்கள் மட்டுமே மாணவர்களுடன் பயணிக்க சாலையில் அனுமதிக்கப்படும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்
Similar News
News July 8, 2025
“விரைவில் ஆதார் அடிப்படையில் இலவச அரிசி” – அமைச்சர் தகவல்

காரைக்காலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், “அரசின் இலவச அரிசியானது உரியவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.வேறு யாரும் இதனால் ஆதாயம் அடையக் கூடாது என்ற நோக்கில் ஆதார் அடிப்படையில் அரசின் இலவச அரிசியானது வழங்க உத்தேசிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
News July 8, 2025
புதுச்சேரி: மணல் லாரி மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஊசுடு ஏரிபகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் அருகில் காலை 8 மணி அளவில் மணல் ஏற்றி வந்த லாரி, அவ்வழியே தந்தையோடு பள்ளிக்கு சென்ற இரண்டு மாணவர்களின் மீது மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்களும் உயிரிழந்தனர். இதனால், அந்த மானவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 3 மணி நேரம் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News July 8, 2025
புதுவை அரசுப் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆசிரியை

புதுவை முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசுப் பள்ளியில், ஆங்கில மொழி திறனை வலுப்படுத்த இனியா ஸ்ரீ என்ற பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மையை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த பேசும் பொம்மையில் ராஸ்பெர்ரி பை 3 போன்ற சிறிய கணினி அமைப்புகள், ஸ்பீக்கர், மைக்ரோ போன் & இணைய வசதி பயன்படுத்தப்பட்டு, 5000 ஆங்கில வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.