News April 16, 2025

கல்வி செலவை அரசே ஏற்கும் – புதுவை முதல்வர்

image

புதுவையில் மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை விழாவில் இன்று புதுச்சேரி முதல்வர் பங்கேற்றார். அதில், மீனவ இன மாணவ மாணவிகளுக்கான கல்விச் செலவை முழுமையாக அரசு ஏற்கும் எனும் புதிய அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

காரைக்கால்: அரசு ஊழியர்களுக்கு அரசாணை வெளியீடு

image

காரைக்கால் (டிச.23) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் பணியின் போதோ, அல்லது ஒய்வு பெற்றோ இறந்துவிட்டால், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், மற்றும் நிதி சார்ந்த தணிக்கைத் தடைகள் அனைத்தும் தானாகவே ரத்தாகிவிடும். அது சார்ந்து எந்தவித ஒய்வூதியப் பலன்களையும் நிறுத்தக் கூடாது என அரசாணை வெளியிட்டுள்ளது.

News December 23, 2025

புதுவை: ஆளுநர் பெயரில் ஹரியானாவை சேர்ந்தவர் மோசடி

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெயரில் முகநுால் கணக்கு துவங்கி, பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட முயற்சி செய்த இணையவழி மோசடி கும்பல் மீது, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணின் முகவரி ஹரியானா என தெரிய வந்துள்ளது.

News December 23, 2025

புதுச்சேரி: அரசு காலண்டர் வெளியீட்டு விழா

image

புதுச்சேரி அரசு 2026 ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா, இன்று சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி காலண்டரை வெளியிட்டார். இதில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அச்சுத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ லட்சுமிகாந்தன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!