News March 15, 2025

கல்வியில் சிறந்து விளங்க தர்மலிங்கேஸ்வரர் கோவில்

image

சென்னை நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற சர்வமங்களா தேவி உடனமர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க சிறந்த தலமாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பயன்பெறுங்க, தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னையைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 16, 2025

மரம் வெட்டும்போது 2 பேர் பலி

image

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மரம் வெட்டும் பணியின்போது 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கராஜ் மற்றும் விஜயகுமார் ஆகியோர் உயிரிழந்த நிலையில், தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 16, 2025

மதியம் அடிதடி.. இரவில் கொலை 2/2

image

ராஜா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலையாளிகளை அடையாளம் கண்டறிந்தனர். அவர்கள், வாண்டு மணி, வெள்ளை ராகுல், விக்னேஷ் ஆகும். மணியின் கூட்டாளியான விஜய் என்பவரிடம் சம்பவத்தன்று மதியம் ராஜா தகராறில் ஈடுபட்டு விஜய்யை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி, தனது கூட்டாளிகள் 2 பேருடன் அன்று மாலையே ராஜாவை கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

error: Content is protected !!