News August 2, 2024
கல்வராயன் மக்களுக்கான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலை பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வை முடித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News November 28, 2025
கள்ளக்குறிச்சி மாணவி சாதனை.. குவியும் பாராட்டு!

கள்ளக்குறிச்சி: கரூரில், மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில், பங்கேற்ற வேளாகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி செல்வி ஜி. கவிதா, ஏழாம் வகுப்பு கவிதை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு இன்று (நவ.28) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
News November 28, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, India Post Payments Bank-ல் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News November 28, 2025
உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.10,000 – ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட முழுவதும் எங்கேயாவது சாலை விபத்து ஏற்படும் இடங்களில் உள்ள நபர்கள் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனைக் அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றும் நபர்களுக்கு” நல்ல சமரியான்” திட்டம் மூலம் ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கும்.


