News October 24, 2024
கல்லூரி வாலிபால் போட்டியில் இரட்டை தங்கம்

தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகளில், செங்கல்பட்டு கல்லூரி மாணவர், மாணவிகள் வாலிபாலில் இரட்டை தங்கம் வென்றனர். கடந்த அக்.4இல் தொடங்கிய முதல்வர் கோப்பை மாநில போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கல்லூரி வாலிபால் பிரிவில் மாணவர், மாணவிகள் என பிரிவுகளிலும் செங்கல்பட்டு இரட்டை தங்கம் வென்றது. இதனால், செங்கல்பட்டு 29 தங்கம், 25 வெள்ளி, 29 வெண்கலம் வென்றுள்ளது.
Similar News
News July 9, 2025
காவல் உதவி செயலின் வசதி மற்றும் முக்கியத்துவம்

செங்கல்பட்டு காவல்துறை மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நீங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம், இருப்பிடத்தைப் பகிரலாம், அவசர எச்சரிக்கைகளைப் பெறலாம், அருகிலுள்ள காவல் நிலையங்களின் இருப்பிடத்தை அறியலாம் மற்றும் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் மற்றும் ஒரு அவசர SOS பொத்தான் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
News July 9, 2025
காவல்துறை பெண்களுக்கான விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று (ஜூலை-9) வெளியிட்டுள்ளது. நீங்கள் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் இன்றே வன்முறைக்கு முடிவுகட்ட உடனடியாக அழைக்கவும். பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்கள் ☎️ 1091 அல்லது ☎️ 181.
அல்லது அழைக்கவும் அவசர உதவி எண் ☎️100.
News July 9, 2025
இளைஞர்களே இனி வெற்றி நிச்சயம்

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். இந்த <