News November 23, 2024
கல்லூரி மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

நாகையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் (வயது 24) என்ற வாலிபர் காதலித்து இரு முறை கர்ப்பமாக்கி உள்ளார். இதையடுத்து மாணவி திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் ஜான்சன் மறுத்துள்ளார். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் நாகை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி வழக்கு பதிவு செய்து ஜான்சனை கைது செய்து விசாரணை நடத்தினார்.
Similar News
News December 26, 2025
நாகை: செல்வம் பெருக இந்த கோயில் போங்க!

நாகை அருகே மயிலாடுதுறை, புஞ்சை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நற்றுணையப்பர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நற்றுணையப்பரை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News December 26, 2025
நாகையில் சுனாமி நினைவு தினம்; அஞ்சலி செலுத்திய MP

நாகை மாவட்டம் அக்கரைபேட்டையில் சுனாமியில் உயிர்நீத்தவர்களின் 21-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்று, கடலில் மலர் தூவியும் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
News December 26, 2025
நாகை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

நாகை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <


