News April 2, 2025
கல்லூரி மாணவி இறப்பில் மர்மம்

பல்லடத்தைச் சேர்ந்தவர் வித்யா(22). கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்துள்ளார். இந்நிலையில் கடந்த 30ந்தேதி வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்ற போது வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வித்யா உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 18, 2025
திருப்பூர் கஞ்சா வைத்திருந்த இருவர் அதிரடி கைது

திருப்பூர் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியில் மங்களம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கட்டிராஜா மற்றும் திருமூர்த்தி ஆகியோரிடம் சோதனை நடத்தியபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 950 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

News November 17, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவி 108 அழைக்கவும்.