News August 3, 2024
கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.
Similar News
News November 28, 2025
திருச்சி: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில், முதுநிலை திட்ட உதவியாளர் பதவிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களுடன் வரும் 12.12.2025 க்குள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
திருச்சி: இலவச ஓட்டுநர் பயிற்சி – கலெக்டர்

திருச்சியில் கிராமப்புற இளைஞர்களுக்கான “உதவி உழுவை ஓட்டுநர்” இலவச வேலை வாய்ப்பு பயிற்சி, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள கல்வி தகுதி தேவையில்லை. பயிற்சி நிறைவு செய்த பின் உழுவை இயந்திரத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வெற்றி நிச்சயம் என்ற செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருச்சி: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம்- 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் – 1077 ஐ அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!


