News March 27, 2025
கல்லூரி மாணவர்கள் விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களில் விளையாட்டு துறையில் சாதித்து வருபவர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு நிலை விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விடுதியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து ஏப்.,6ம் தேதி 5 மணிக்குள் பதியவும்.
Similar News
News November 8, 2025
பரமக்குடி வாக்காளர் கவனத்திற்கு… கோட்டாட்சியர் அறிவிப்பு

பரமக்குடி(தனி) சட்டமன்றத் தொகுதியில் SIR கணக்கெடுப்புப் பணி நவ 4- டிச. 4 வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் https://voters.ecl.gov.in & crolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வலைதளங்களில் வாக்காளர் சுய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். SIR தொடர்பான சந்தேகங்கள், கூடுதல் விவரங்களுக்கு தொகுதி கட்டுப்பாட்டு அறையை 04564 224151ல் தொடர்பு கொள்ளலாம் என பரமக்குடி கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
ராம்நாடு: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) ராம்நாடு மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 8, 2025
ராம்நாடு: காதல் விவகாரம்.. 2 பேருக்கு வெட்டு

திருவாடானை கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவியை அதே கல்லூரியில் பயிலும் தொண்டி மாணவரும், மானாமதுரை வாலிபரும் காதலித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மானாமதுரையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறில் தொண்டி சத்யபிரசாத் (26), நம்புதாளை முகமது ரிஸ்வான் மீது வாள், கத்தியால் வெட்டு விழுந்துள்ளது. இதில் மானாமதுரையை சேர்ந்த கவிபாண்டி (24) என்பவரை தொண்டி போலீசார் கைது செய்தனர்


