News February 16, 2025
கல்லால் அடித்து பெண் கொலை கணவா் கைது

கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கி.மணிகண்டன் இவரது மனைவி உமா மணிகண்டனுக்கும் உமாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த உமாவின் தலையில் குழவிக் கல்லால் மணிகண்டன் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த உமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
விக்கிரவாண்டி:முத்தம்பாளையம் ஏரி தன்னார்வலர்கள் சீரமைப்பு

விக்கிரவாண்டி வட்டம் முத்தாம்பாளையம் ஏரி தென்மேற்கு பகுதியில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து புனரமைக்கும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.27) துவக்கி வைத்தார். உடன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News December 27, 2025
விழுப்புரம்: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04146-259216) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
விழுப்புரம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


