News January 2, 2025

கல்லங்குடியில் மக்கள் தொடர்பு முகாம்

image

தேவகோட்டை வட்டம் கல்லங்குடி கிராமத்தில் வரும் 08ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று (ஜன.02) தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

சிவகங்கை அருகே ஒருவர் வெட்டி படுகொலை

image

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆர்ச் முன்பாக கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் (29) என்பவர் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இளையான்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 22, 2025

தீபாவளிப் பண்டிகையை யொட்டி பதிவான வழக்குகள்

image

சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் காரைக்குடி, சிவகங்கை, காளையாா்கோவில், தேவகோட்டை போன்ற பகுதிகளில் பொது இடங்களில் மதுபோதையில் தகராறு செய்ததாக 28 வழக்குகளும் வாகன விபத்து, மதுபானக் கடையில் தகராறு, பட்டாசு விபத்து உள்பட சம்பவங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

சிவகங்கை:பட்டாசு வெடித்ததில் 8 பேர் GH-ல் அனுமதி

image

சிவகங்கை மாவட்டத்தில் பட்டாசு வெடிக்கும் போது காயமடைந்த 8 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை மருத்துக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் குடித்துவிட்டு தகராறு செய்ததாக 28 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!