News March 28, 2025
கல்யாண பாக்கியம் தரும் பேளூர் கோயில்!

சேலம்: பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கி.பி.12ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் தான்தோன்றீஸ்வரர் (சிவன்),இறைவி தர்மசம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் கல்யாண விநாயகருக்கு மாலை,தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும். மனமுருக வேண்டினால் கல்யாணம், குழந்தை பாக்கியம் கிட்டும்.
Similar News
News December 5, 2025
சேலம் சிறைக்குள் சொகுசு வாழ்க்கையா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறைச்சாலையில் காவலரிடம் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று மத்திய சிறைச்சாலை முழுவதும் காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பல்வேறு கைதிகளிடமிருந்து 12 செல்போன்கள், சார்ஜர்கள் ,சிம்கார்டுகள், மற்றும் கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
News December 5, 2025
சேலம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 5, 2025
சேலம் மக்களே! இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

சேலம்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <


