News March 26, 2025

கல்பாக்கம் அணு மின் நிலையம் வேலைவாய்ப்பு

image

செங்கல்பட்டில் இயங்கி வரும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் Nurse, Medical Officer, Lab Technician ஆகிய பதவிகளுக்கு 14 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 23க் குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.47,430 முதல் ரூ.108,508 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முன் வயது, கல்வி தகுதி ஆகியவற்றை இந்த <>இணையதளத்தில்<<>> தெரிந்து கொள்ளலாம். #Share_It

Similar News

News November 27, 2025

செங்கல்பட்டு: லாரியில் ரூ.7 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தல்

image

தாம்பரம் அருகே குரோம்பேட்டை மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட, ரூ.7 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ குட்காவை ஏற்றி வந்த இரண்டு சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் (53) மற்றும் அவருக்கு உதவிய முருகன் (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 27, 2025

செங்கல்பட்டு: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

செங்கல்பட்டு மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

செங்கல்பட்டு: பைக் திருடிய இருவர் கைது

image

குரோம்பேட்டை குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் பவுல் ஜோசப் என்பவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருட்டில் ஈடுபட்ட குரோம்பேட்டையை சேர்ந்த மதன் (20) மற்றும் அவரது நண்பர் சண்முகம் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!