News June 6, 2024
கல்குவாரியில் மின்னல் தாக்கி 3 பேர் படுகாயம்

குமரி, சித்திரங்கோட்டில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இன்று ஊழியர்கள் குவாரி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. மதியம் சுமார் ஒரு மணி அளவில் மின்னல் தாக்கி 3 ஊழியர்கள் தூக்கி வீசப்பட்டு ஆபத்தான நிலையில் குலசேகரம், தக்கலை பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கொற்றிகோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 22, 2025
ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு பிரிவு

நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் கொண்ட பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு 11 கோடியே 40 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாகர்கோவிலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News April 22, 2025
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன்

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக 42 கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு பூதப்பாண்டியில் அரசு மருத்துவமனையில் இசிஜி கருவி அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
News April 21, 2025
திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை

திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த ரயிலில் பெரிதும் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலின் சேவையை தினசரி இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.